தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால் கோரம்பள்ளம் குளம் நிரம்பி வழிகிறது. குளத்தின் பாதுகாப்பைக் கருதி, 24 மதகுகளில் மூன்று மதகுகள் திறக்கப்பட்டு, சுமார் 3000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து நீர் வரத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.