கஞ்சா விற்பனை 2 சிறுவர்கள் உள்ளிட்ட 4பேர் கைது

2பார்த்தது
கஞ்சா விற்பனை 2 சிறுவர்கள் உள்ளிட்ட 4பேர் கைது
தூத்துக்குடி தெர்மல் நகரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சர்வீஸ் சாலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த சிலர் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சா மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், கைதானவர்கள் கொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய ரிதன் (21), சதீஷ் (22) மற்றும் இரு இளஞ்சிறார்கள் என்பது தெரியவந்தது. தப்பி ஓடிய ஒரு இளஞ்சாரரை போலீசார் தேடி வருகின்றனர். கஞ்சா விற்பனைக்கு பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி