காவல்துறை மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 56 மனுக்கள்!

290பார்த்தது
காவல்துறை மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 56 மனுக்கள்!
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வாரந்தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி, மனுதாரர்கள் தங்கள் குறைகளை காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் ஆறுமுகம் மற்றும் தீபு ஆகியோரிடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த அதிகாரிகள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட மனுக்களின் விசாரணையில் திருப்தி அடையாத புகார்தாரர்கள் புதன்கிழமைகளில் நடைபெறும் இக்கூட்டத்தில் நேரில் ஆஜராகி தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

தொடர்புடைய செய்தி