தூத்துக்குடிக்கு ரயிலில் 850 மெ. டன் யூரியா வரத்து

0பார்த்தது
தூத்துக்குடிக்கு ரயிலில் 850 மெ. டன் யூரியா வரத்து
தூத்துக்குடி மாவட்டத்துக்கு மானாவாரி, பிசான சாகுபடிக்காக 850 மெட்ரிக் டன் உரம் ரயில் மூலம் கொண்டு வரப்பட்டது. இதில் 220 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்களும் அடங்கும். மேலும், 500 மெட்ரிக் டன் யூரியா உரங்கள் சனிக்கிழமை (நவ. 15) விநியோகிக்கப்படவுள்ளன. தற்போது மாவட்டத்தில் 3,000 மெட்ரிக் டன் யூரியா, 2,700 மெ. டன் டிஏபி, 3,200 மெ. டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் கையிருப்பில் உள்ளன. விவசாயிகள் தேவைக்கேற்ப உரங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என வேளாண் இணை இயக்குநர் இரா. பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி