தமிழக அரசு இன்று தமிழக காவல்துறையில் ஐபிஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி மதன் உள்பட பல அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும், தூத்துக்குடி மாவட்டத்திற்கு புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இதுவரை நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.