தூத்துக்குடி: மது போதையில் தகராறு; வாலிபர் வெட்டிக்கொலை

839பார்த்தது
தூத்துக்குடி: மது போதையில் தகராறு; வாலிபர் வெட்டிக்கொலை
தூத்துக்குடி தாளமுத்து நகர் நேரு காலனி அருகே, மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் 19 வயது மாரி செல்வம் என்ற இளைஞனை அவனது நண்பர்களே அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரமாகத் தாக்கினர். இதில் படுகாயமடைந்த மாரி செல்வம், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தான். இந்தச் சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் 3 பேரை ஏற்கனவே கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி