தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் பகுதியில் அமைந்துள்ள டோல்கேட்டில் நிலக்கரி ஏற்றி வந்த டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக லாரி கவிழும் போது அருகில் யாரும் இல்லாததால் பெரிய உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து மேலரசரடி பகுதியில் அமைந்துள்ள தனியார் அனல்மின் நிலையத்திற்கு கரி ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி ஒன்று வந்துள்ளது. இந்த லாரியை மகேஷ் குமார் என்பவர் ஓட்டி வந்துள்ளார். டிப்பர் லாரி தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் டோல்கேட் பகுதிக்குள் நுழையும் போது டோல்கேட் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மின் விளக்குகளை உடைத்துக் கொண்டு நிலைதடுமாறி அப்படியே குப்புற கவிழ்ந்தது.
இதில் லாரி தலைகுப்புற கவிழ்ந்ததால் லாரியில் இருந்த நிலக்கரி முழுவதும் டோல்கேட் பகுதியில் தரையில் கொட்டி சிதறி காணப்பட்டது. அதிர்ஷ்டவசமாக லாரி ஓட்டுநர் மகேஷ் குமார் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். அதிர்ஷ்டவசமாக லாரி தலைகுப்புறக் கவிழும் போது அந்த பகுதியில் அருகில் மற்ற வாகனங்களோ அல்லது யாரும் நிற்காததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.