புதுக்கோட்டையில், கடன் கொடுக்கல் வாங்கல் தகராறில் டிரைவரை அரிவாளால் வெட்ட முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர். சதீஷ் என்பவரிடம் குணசேகரன் என்பவர் வாங்கிய கடன் தொகையை திருப்பி கேட்டபோது ஏற்பட்ட முன்விரோதத்தால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. நேற்று முன்தினம் சதீஷை வழிமறித்து தாக்கியபோது அவர் தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.