தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தில் உள்ள மஸ்ஜித் ரஹ்மான் தொழுகை திடலில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் பக்ரீத் திருநாள் பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான ஆண், பெண் இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு உலக அமைதி மற்றும் சகோதரத்துவம் வேண்டி தொழுகை நடத்தினர். தொழுகைக்குப் பிறகு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். தொடர்ந்து, ஆடுகள் பலியிட்டு, அதன் ஒரு பகுதியை ஏழைகளுக்கு தர்மமாக வழங்கினர்.