பத்திரப்பதிவு அலுவலகத்தில் தலைவிரித்தாடும் லஞ்சம்!

5பார்த்தது
பத்திரப்பதிவு அலுவலகத்தில் தலைவிரித்தாடும் லஞ்சம்!
தூத்துக்குடி போல்பேட்டை ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகத்தில் பொதுமக்களிடம் கட்டாய லஞ்சம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஏழை எளிய மக்களிடம் சட்ட சாக்குப்போக்குகள் கூறி ரூ. 10,000 முதல் பல லட்சம் வரை லஞ்சம் கேட்கப்படுவதாகவும், பணம் தராதவர்களின் ஆவணங்கள் தாமதப்படுத்தப்படுவதாகவும் புகார்கள் தெரிவிக்கின்றன. புதிய அரசு பொறுப்பேற்ற பின்னரும் நிலைமையில் மாற்றமில்லை, மாறாக ஊழல் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால், மாவட்டம் முழுவதும் உள்ள 13 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரகசிய கண்காணிப்பு மற்றும் அதிரடி சோதனைகள் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.