2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல்களை முன்னிட்டு, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் நான்கு வாக்குச்சாவடிகளுக்கு மேல் உள்ள மையமான விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான திரு. க. இளம்பகவத் இன்று (27.02.26) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேர்தல் பணிகளை அவர் விரிவாக கேட்டறிந்தார்.