BLO-க்களுக்கு ஆட்சியர் இளம் பகவத் பாராட்டு

2பார்த்தது
BLO-க்களுக்கு ஆட்சியர் இளம் பகவத் பாராட்டு
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (01.12.2025) நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – 2026 தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில், பணிகளை துல்லியமாகவும், விரைவாகவும் மேற்கொண்டு சிறப்பாக பணியாற்றிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான திரு. க. இளம்பகவத், இ.ஆ.ப. , பரிசுகளை வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். மக்கள் நலனுக்காக பொறுப்புடன் செயல்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியர் நன்றி தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வில் வருவாய், தேர்தல், ஊராட்சி, நகராட்சி துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி