தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே ஆத்திகுளம் வடக்குத் தெருவைச் சேர்ந்த 17 வயது மாணவி ஸ்ரீ சத்யா, திருநெல்வேலியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்சி. கணிதம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அண்மையில் எழுதிய கல்லூரி தேர்வில் தேர்ச்சி பெறாததால் மன வருத்தமடைந்த அவர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாய் அளித்த புகாரின்பேரில் கயத்தாறு போலீசார் வழக்குப்பதிந்து, உடலை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.