கோவில்பட்டியில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் 125 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தமிழக அரசின் சமூக நலன் மற்றும்மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம், கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் 125 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா சௌபாக்கியா மஹாலில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்ட தலைவர் விநாயகா ரமேஷ், துணை ஆளுநர் முத்துச்செல்வம், சுப்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் தாஜுன்னிசா பேகம் வரவேற்றார். கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 125 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை மற்றும் சீதன பொருட்களான வளையல், புடவை, தேங்காய், குங்குமம், சந்தனம், கடலைமிட்டாய், பூ, தட்டு உள்ளிட்ட சீதன பொருள்களை வழங்கி வாழ்த்தி பேசினார். கீழ ஈரால் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழுவினர் கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.
அனைவருக்கும் ஐந்து வகை சாத உணவுகள் வழங்கப்பட்டது.