தூத்துக்குடியில் சிகரெட் வியாபாரி தினகரனை தாக்கி, அவரது செல்போனை பறித்துச் சென்ற இரு கொள்ளையர்களை போலீசார் சுமார் 8 கி.மீ தூரம் துரத்திச் சென்று கைது செய்தனர். காயமடைந்த வியாபாரி தினகரன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கைது செய்யப்பட்ட பிரேம்குமார் (36) மற்றும் பென்கர் (40) ஆகியோர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.