எபோலா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ஆட்சியர் ஆலோசனை

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில், எபோலா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. மேலை நாடுகளில் பரவிவரும் தொற்றை முன்னிட்டு, தூத்துக்குடியில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 6 படுக்கைகள் கொண்ட தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் சுகாதாரத்துறை மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் பங்கேற்று ஆலோசனை செய்தனர்.
