மாநிலத்தை அடகு வைத்தவர் – எடப்பாடி; கனிமொழி குற்றச்சாட்டு

0பார்த்தது
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி. கூறுகையில், திமுக-காங்கிரஸ் கூட்டணி பல ஆண்டுகளாக நிலைத்துள்ள வலுவான கூட்டணி என்பதால் அதில் எந்த மாற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை. கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக பாஜக கூறுவது தேவையற்றது என்றும், அவர்கள் தங்களது கூட்டணியை சரியாக வைத்துக் கொண்டாலே போதுமானது என்றும் தெரிவித்தார். மேலும், திமுகவின் அடிப்படை கொள்கை மாநிலத்தில் சுயாட்சி மற்றும் மத்தியில் கூட்டாட்சி என்பதாகும் என்றும், அதை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறியாமல் இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி