தூத்துக்குடியில் நேற்று மதியம் முதல் பெய்த கனமழையால், இன்று காலை 6.30 மணி நிலவரப்படி மாநகரப் பகுதியில் 66 மி.மீ மழை பதிவானது. இந்த மழையால் கணேச நகர், நால்வர் நகர் பகுதியில் தேங்கிய மழை நீரில் மின் கசிவு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் நடந்து சென்ற 75 வயதான ஓய்வு பெற்ற தொழிலாளி பழனியாண்டி, மின்சாரம் பாய்ந்த நீரில் சிக்கி உயிரிழந்தார். தகவல் அறிந்து விரைந்த மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்தனர். பழனியாண்டியின் உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.