தூத்துக்குடியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

4பார்த்தது
தூத்துக்குடியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
தூத்துக்குடி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் வெளியிட்டார். தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான பட்டியல் வெளியிடப்பட்டது. மாவட்டத்தில் மொத்தம் 13,76,624 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 6,71,742 ஆண்கள், 7,04,689 பெண்கள் மற்றும் இதர பிரிவினரும் அடங்குவர். சிறப்பு திருத்தத்திற்குப் பிறகு 58,092 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு, 9,626 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி