சினை பசு மாட்டினை மீட்ட தீயணைப்பு துறை வீரர்கள்

2பார்த்தது
சினை பசு மாட்டினை மீட்ட தீயணைப்பு துறை வீரர்கள்
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே சிறுபாடு விஜிபி நகரில் புதிய வீடு கட்ட தோண்டப்பட்ட 7 அடி ஆழமுள்ள குழியில் சினை பசு மாடு தவறி விழுந்தது. அதன் உரிமையாளர் ஆனந்தன் சிப்காட் தீயணைப்பு மீட்புப் பணி நிலையத்தை தொடர்பு கொண்டு உதவி கோரினார். நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் சென்ற தீயணைப்பு வீரர்கள், கயிறுகள் மற்றும் ஜேசிபி உதவியுடன் பத்திரமாக மாட்டை மீட்டனர். எந்த காயமுமின்றி மீட்கப்பட்ட மாட்டை கண்டு மக்கள் தீயணைப்பு வீரர்களை பாராட்டினர்.

தொடர்புடைய செய்தி