தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள், குறிப்பிட்ட கிடங்கிற்கு கொண்டு செல்லாமல் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் சாலை ஓரங்களில் குவிக்கப்படுகின்றன. இதனால் கடுமையான துர்நாற்றம், கொசு-ஈக்கள் அதிகரிப்பு மற்றும் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த அலட்சியத்திற்கு எதிராக மக்கள் கண்டனம் தெரிவித்து, மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.