போலீஸ் வாகனங்களில் ஜி. பி. எஸ். கருவி பொருத்தம்: எஸ். பி ஆய்வு!

274பார்த்தது
போலீஸ் வாகனங்களில் ஜி. பி. எஸ். கருவி பொருத்தம்: எஸ். பி ஆய்வு!
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில், முதற்கட்டமாக 80 காவல் வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் இதனை ஆய்வு செய்து ரோந்து பணியைத் தொடங்கி வைத்தார். இந்த புதிய வசதியின் மூலம், கட்டுப்பாட்டு அறையிலிருந்து வாகனங்களை நேரலையாகக் கண்காணித்து, குற்றம் அல்லது விபத்து நடந்த இடங்களுக்கு அருகிலுள்ள காவல் வாகனங்களை உடனடியாக அனுப்ப முடியும். இதனால் காவல்துறையின் செயல்திறன் உயர்ந்து, பொதுமக்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்.

தொடர்புடைய செய்தி