தூத்துக்குடி: வீட்டிற்குள் நுழைந்த கொம்பேறி மூக்கன் பாம்பு

786பார்த்தது
தூத்துக்குடி: வீட்டிற்குள் நுழைந்த கொம்பேறி மூக்கன் பாம்பு
தூத்துக்குடி இரயில்வே குடியிருப்பில் பிரம்ம முத்து என்பவரது வீட்டினுள் 3 அடி நீளமுள்ள கொம்பேறி மூக்கன் பாம்பு புகுந்தது. இதனைக் கண்ட அதிர்ச்சியில் வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறி சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் த. கார்த்திகேயன் தலைமையில் விரைந்த தீயணைப்பு வீரர்கள், வீட்டினுள் பதுங்கியிருந்த பாம்பை லாவகமாகப் பிடித்து வனப்பகுதியில் விட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி