சாத்தான்குளம் வட்டத்தில் "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் இன்று (18.02.2026) முகாமிட்டு ஆய்வு மேற்கொள்ள உள்ளார். மதியம் 2.30 முதல் 4.30 மணி வரை வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்படும். பின்னர், அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தி, நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் அரசு திட்டங்கள் மற்றும் சேவைகள் பரிசோதிக்கப்படும். மேலும், நாளை (19.02.2026) குடிநீர், சுகாதாரம், தூய்மை, போக்குவரத்து மற்றும் முதல்வர் காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.