தூத்துக்குடி: மர்மமான முறையில் இறந்து கிடந்த சடலம்

79பார்த்தது
தூத்துக்குடி: மர்மமான முறையில் இறந்து கிடந்த சடலம்
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே மேலரசடி பகுதியில் தூத்துக்குடி மதுரை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தின் கீழ் பகுதியில் பயன்பாடு இல்லாத கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தின் மாடியில் இறந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக மேலரசடி கிராம நிர்வாக அலுவலர் முத்துசெல்வம் புதியம்புத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து புதியம்புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு சுமார் 45 வயது மதிக்கத்தக்க மர்மமான முறையில் இறந்த நிலையில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். 

மேலும் இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுதீர், புதியம்புத்தூர் காவல் நிலையத் தொடர்பு காவல் ஆய்வாளர் சைரஸ் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், தடய அறிவியல் நிபுணர் பழனிச்செல்வி, கைவிரல் ரேகை பிரிவினர் கலாலட்சுமி அப்பகுதியில் பதிவான ரேகைகளை ஆய்வு செய்தனர். 

மேலும் இறந்தவர் சிவப்பு கலர் முழுக்கை சட்டையும் கட்டம் போட்ட சாரமும் அணிந்திருந்தார். மேலும் இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர், கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலையா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி