தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தில் 200க்கும் மேற்பட்ட புதிய இளைஞர்கள் மற்றும் மாற்றுக் கட்சியினர் இணைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில், நேற்று (டிசம்பர் 29) தமிழக வெற்றிக் கழகத்தில் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள், புதிய வாக்காளர்கள் மற்றும் மாற்றுக் கட்சி இளைஞர்களும் நமது தமிழக வெற்றிக் கழகத்தில், நமது மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் இணைந்தார்கள்.
இந்த நிகழ்ச்சி தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்டது. பின்பு உறுதிமொழி எடுக்கப்பட்டு, கொள்கை கோட்பாடுகளை இளைஞர்களுக்கு விளக்கி, இளைஞர்களை கழகத்தில் இணைத்தார்கள். மேலும் இந்த இணைப்பு விழாவில் வருகிற சட்டமன்ற தேர்தலில் தூத்துக்குடி மாவட்டம் 6 தொகுதியிலும் வெற்றி வாகை சூடுவோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.