ஓட்டப்பிடாரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை முதற்கட்ட கலந்தாய்வு நடைபெறவிருக்கிறது என மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவதி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகாவில் தமிழ்நாடு முதலமைச்சர் காணொளிக் காட்சி வாயிலாக தொடங்கி வைக்கப்பட்டு ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தற்காலிகக் கட்டடத்தில் செயல்பட்டுவரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை பாடப்பிரிவிற்கான முதலாமாண்டு மாணவர் சேர்க்கை முதற்கட்ட கலந்தாய்வு பின்வரும் தேதிகளில் நடைபெறவிருக்கிறது.
அதன்படி, 02.06.2025 அன்று சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு (மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் இராணுவத்தினரின் வாரிசுகள், தேசிய மாணவர் படை, பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளைச் சேர்ந்த தமிழ் மாணாக்கர்கள்), பொது பிரிவினருக்கான கலந்தாய்வு 04.06.2025 அன்று B.Sc. ஜூலொஜி (தமிழ்வழி), B.Sc. கணினி அறிவியல் (ஆங்கிலவழி), B.A. வரலாறு (தமிழ்வழி), B.B.A (ஆங்கிலவழி), B.Com (ஆங்கிலவழி) ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் நடைபெறுகிறது.
இணையவழியில் விண்ணப்பித்த மாணவ, மாணவியர் பின்வரும் அசல் சான்றிதழ்கள் மற்றும் மூன்று நகல்களுடன் காலை 9.30 மணிக்குள் கல்லூரி வளாகத்திற்கு வருகை புரியமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.