சொத்து, குடிநீர் வரி, செலுத்திட வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு

0பார்த்தது
சொத்து, குடிநீர் வரி, செலுத்திட வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்ட கிராம ஊராட்சிகளிலுள்ள வீடுகள், கடைகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலை கட்டட உரிமையாளர்கள் 2025-2026 நிதியாண்டிற்கான சொத்து வரியை 31.05.2025-க்குள் செலுத்த வேண்டும். நிலுவையில் உள்ளவர்கள் 15.12.2025-க்குள் ஊராட்சி மன்ற அலுவலகத்திலோ அல்லது கணினி மையங்களிலோ வரி விதிப்பு எண்ணை சரிபார்த்து, https://vptax.tnrd.tn.gov.in/ இணையதளத்தில் செலுத்தி, கணினிவழி இரசீதுகளை பதிவிறக்கம் செய்யுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் தெரிவித்துள்ளார். மேலும், குடிநீர் கட்டணத்தையும் நிலுவையின்றி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி