தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை பிரதான சாலையில் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பெரிய பள்ளத்தில் நேற்று இரவு பெய்த கனமழையால் மழைநீர் தேங்கி, பள்ளம் தெரியாமல் இருசக்கர வாகனங்கள் சிக்கி விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் காயமடைந்துள்ளனர். இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால், சாலையை உடனடியாக சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.