பைக் விபத்தில் ஓய்வுபெற்ற விஏஓ சிகிச்சை பலனின்றி பலி

1பார்த்தது
பைக் விபத்தில் ஓய்வுபெற்ற விஏஓ சிகிச்சை பலனின்றி பலி
தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி ராமகிருஷ்ணன் (62) உயிரிழந்தார். மற்றொரு கிராம நிர்வாக அதிகாரி பேச்சிராஜா (55) காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். தளவாய்புரம் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வரும் பேச்சிராஜா, ஓய்வு பெற்ற அதிகாரி ராமகிருஷ்ணனுடன் மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடிக்கு வந்து கொண்டிருந்தபோது, கோரம்பள்ளம் ஜங்ஷன் அருகே மேம்பாலப் பணி நடைபெறும் சர்வீஸ் சாலையில் நிலைத்தடுமாறி தடுப்புச் சுவரில் மோதியதில் இந்த விபத்து நேர்ந்தது. புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி