சாலைகளைச் சீரமைக்க வேண்டும்: எம். எல். ஏவிடம் மனு!

278பார்த்தது
சாலைகளைச் சீரமைக்க வேண்டும்: எம். எல். ஏவிடம் மனு!
பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுக்கோட்டை மற்றும் வீரசக்கதேவி ஆலயத்திற்கு செல்லும் சாலைகள் சேதமடைந்துள்ளதால், சித்திரை திருவிழாவிற்கு முன் அவற்றை சீரமைக்க வேண்டும் என, அருள்மிகு வீரசக்கதேவி ஆலயம் விழாக்குழுவினர் சண்முகையா எம்.எல்.ஏவிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இந்த கோட்டை 1974-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி அவர்களால் கட்டப்பட்டது. மே 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள அரசு விழா மற்றும் ஆலய திருவிழாவிற்கு முன் சாலைகள் சீரமைக்கப்படாவிட்டால் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் சிரமத்திற்குள்ளாவார்கள் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி