முத்தையாபுரம் பகுதியில் சிவந்தாகுளத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவரிடம் வெள்ளி கைச்செயின், மோதிரம் மற்றும் செல்போன் பறிக்கப்பட்ட சம்பவத்தில், முள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் (19) மற்றும் ஒரு இளஞ்சிறார் ஆகியோர் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் வசந்தகுமாரை கைது செய்து, இளஞ்சிறாரை கையகப்படுத்தி, பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை மீட்டனர். வழக்கு தொடர்பாக விசாரணை தொடர்கிறது.