தூத்துக்குடி: சைபர் குற்ற வழக்குகளில் ரூ. 6. 90 லட்சம் பணம் மீட்பு

59பார்த்தது
தூத்துக்குடி: சைபர் குற்ற வழக்குகளில் ரூ. 6. 90 லட்சம் பணம் மீட்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் பங்குசந்தை முதலீடு, விமான நிலையத்தில் வேலை வாய்ப்பு என செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பி பணத்தை மோசடி செய்த சைபர் குற்ற வழக்குகளில் ரூ. 6,90,000 பணத்தை மீட்டு, அதன் உரிமையாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஒப்படைத்தார். 

மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம், டெலிகிராம் போன்றவற்றின் மூலம் வரும் போலியான விளம்பரங்களை நம்பி அதில் வரும் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்றும், தேவையில்லாத செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும், இளைஞர்கள் பெண்கள் ஆகியோர் இதுபோன்ற போலியான விளம்பரங்களை தவிர்த்து சைபர் குற்றங்களிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி