தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அறிவிப்பின்படி, வேலைவாய்ப்பின்றி உள்ள இளைஞர்கள் தமிழக அரசின் உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி அடிப்படையில் 3 ஆண்டுகளுக்கு மாதம் ₹200 முதல் ₹600 வரை உதவித்தொகை வழங்கப்படும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் பதிவு செய்து காத்திருப்போர், குடும்ப வருமானம் ₹72,000-க்கு குறைவாக உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். புதிய விண்ணப்பதாரர்கள் கோரம்பள்ளம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே உதவித்தொகை பெறுபவர்கள் தேவையான ஆவணங்களை அஞ்சல் மூலம் அனுப்பலாம்.