தூத்துக்குடி மாவட்டம் தெய்வச் செயல்புரம் கிராமத்தைச் சேர்ந்த 45 வயது பெண்ணை காட்டுப்பகுதிக்கு தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் புதுக்கோட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனை கண்டித்து, குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்பு மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கப்பட வேண்டும் என்றும் கோரி, தெய்வச் செயல்புரம் கிராமத்தில் இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் பூமயில் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிராம மக்கள் மற்றும் அமைப்பினர் பலரும் இதில் கலந்து கொண்டனர்.