தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் தலைமையில் மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் வழக்குகள் விசாரணை, நிலுவை வழக்குகள், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள், ரவுடிகள் மீது நடவடிக்கை மற்றும் நீதிமன்ற பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. காவல் வாகனங்களின் பராமரிப்பு நிலையும் ஆய்வு செய்யப்பட்டு ஓட்டுநர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன. சிறப்பாக பணியாற்றிய 151 காவல்துறையினருக்கு நற்பணி சான்றிதழ் வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.