ஸ்டெம் பூங்கா; மழை நீரால் சூழப்பட்டு குளம் போல் காட்சி

0பார்த்தது
தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் கடந்த 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் பெய்த பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியது. இரண்டு நாட்களாக மழை இல்லாத நிலையிலும், அம்பேத்கர் நகர் மெயின் சாலை மற்றும் சுந்தரவேல் புரம் மேற்கு சாலை போன்ற பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை பாதித்துள்ளது. மேலும், அம்பேத்கர் நகர் மெயின் சாலையில் உள்ள ஸ்டெம் பூங்கா முழுவதும் மழை நீரால் சூழப்பட்டு, லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான அறிவியல் பொருட்கள் சேதமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி