தூத்துக்குடியில், கல்லூரி மாணவர் அருண் (18) மற்றும் அவரது நண்பர்கள் கவின் (14), ஹரிஷ் (17) ஆகியோர் இன்று மாலை 5.30 மணியளவில் மீளவிட்டான் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் காட் வேனில் ஏறி ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது, மேலே சென்ற மின்சார வயரில் கைப்பட்டதில் அருண்குமார் மின்சாரம் தாக்கி பலத்த தீக்காயமடைந்து உயிரிழந்தார். கவின், ஹரிஷுக்கு லேசான காயம் ஏற்பட்டது. மூவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அருண்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மற்ற இருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ரயில்வே இருப்புப் பாதை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.