சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பு: மேயர் தகவல்! க்ஷ

0பார்த்தது
சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பு: மேயர் தகவல்! க்ஷ
தூத்துக்குடியில் ரோட்டரி கிளப் சங்கத்தின் சார்பில் கங்கா பரமேஸ்வரி நகர் பூங்காவில் 48 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் துவக்க விழாவிற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். ஆணையர் ப்ரியங்கா முன்னிலை வகித்தார். ரோட்டரி சங்க தலைவர் பிண்டோ வில்லவராயர் வரவேற்புரையாற்றினார். பின்னர், மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில், மாநகராட்சி பகுதியில் 3000 கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் மழைநீர் தேங்குவதையும், கழிவுநீர் கால்வாய்களில் குப்பைகள் வீசுவதையும் கண்காணிக்க முடியும் என்றும் தெரிவித்தார். அனைத்து கேமராக்களும் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி