தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள சங்கரப்பேரி பகுதியில் சுமார் 29.46 ஏக்கர் அரசு குப்பைக் கிடங்கு நிலத்தை, பட்டா நிலமாக வகைப்பாடு மாற்றம் செய்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் பெயருக்கு மாற்ற வேண்டும். வகைப்பாடு மாற்றப்பட்ட நிலத்தை, அங்குள்ள 1055 மனையதாரர்களுக்குச் சிறப்பு முகாம் மூலம் உடனடியாகப் பட்டாவாக வழங்க வேண்டும். சர்வே எண்களைத் தவறாக உள்ளீடு செய்து, முறையற்ற வழியில் பத்திரப்பதிவு செய்து பொதுமக்களை ஏமாற்றும் செயலைப் பதிவுத்துறை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.