தூத்துக்குடி: தூய்மை பாரத இயக்கம் திட்டத்தில் பணியிடங்கள்: ஆட்சியர் தகவல்

80பார்த்தது
தூத்துக்குடி: தூய்மை பாரத இயக்கம் திட்டத்தில் பணியிடங்கள்: ஆட்சியர் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்கம் (ஊ. ) திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திடும் பொருட்டு வல்லுநர்கள் (Experts) தற்காலிகமாக வெளியாதார முறையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்கம்(ஊ. ) திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திடும் பொருட்டு கீழ்கண்ட வல்லுநர்கள்(Experts) தற்காலிகமாக வெளியாதார முறையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். 1. திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுகாதார பணிகள் (Solid Waste Management and Sanitation) -2 பதவி - ஊதியம் ரூ. 35, 000/- , 2. திரவக்கழிவு மேலாண்மை (Liquid Waste Management) - 1 பதவி - ஊதியம் ரூ. 35, 000/- , 3. திட்டமிடுதல், ஒருங்கிணைத்தல் மற்றும் கண்காணித்தல் ( Planning, Convergence & Monitoring) - 1 பதவி - ஊதியம் ரூ. 35, 000/- , 4. தகவல், கல்வி மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான பணிகள ; (Information Education and Communication IE Consultant) - 2 பதவி - ஊதியம் ரூ. 25, 000/- ஆகும்

தொடர்புடைய செய்தி