தூத்துக்குடி மாவட்டம் காமநாயக்கன்பட்டியில், தமிழ் வளர்த்த இத்தாலியப் பேரறிஞர் வீரமாமுனிவரின் 345வது பிறந்தநாள் விழா இன்று (08.11.2025) கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு அரசு சார்பில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், மாவட்ட ஆட்சித்தலைவர் க. இளம்பகவத் ஆகியோர் மணிமண்டபத்தில் உள்ள வீரமாமுனிவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் பங்கு தந்தை மோயிஸ், வட்டாட்சியர் அப்பனராஜ் மற்றும் அரசு அதிகாரிகள், பெருமக்கள் கலந்துகொண்டனர்.