தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் இன்று காலை 10.30 மணிக்கு சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வருகிறார். நண்பகல் 1 மணி அளவில் திருநெல்வேலி புறவழிச்சாலையில் தேர்தல் பிரசாரம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பின்னர் தாழையூத்து, தச்சநல்லூர், வண்ணார்பேட்டை, மார்க்கெட், K.T.C. நகர் வழியாக தூத்துக்குடி செல்கிறார். மாலை 3 மணி முதல் 3வது மைல் முதல் விவிடி சிக்னல் வரை ரோட் ஷோ நடைபெறுகிறது. இதற்காக சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.