தூத்துக்குடி: மக்கள் தொடர்பு திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்; ஆட்சியர்

61பார்த்தது
தூத்துக்குடி: மக்கள் தொடர்பு திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்; ஆட்சியர்
தூத்துக்குடி கீழத்தட்டப்பாறை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 143 பயனாளிகளுக்கு ரூ. 77,41,331 மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவதி வழங்கினார். தூத்துக்குடி வட்டம், கீழத்தட்டப்பாறை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் வருவாய்த்துறை, மாவட்ட தொழில் மையம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை, கூட்டுறவுத்துறை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை போன்ற அரசுத்துறைகள் சார்பில் 143 பயனாளிகளுக்கு ரூ. 77,41,331 மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவதி வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் தெரிவித்ததாவது: இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமிற்கு திரளாக வந்திருக்கக்கூடிய ஊர் பொதுமக்களே ஊடக நண்பர்களே அனைவருக்கும் எனது இனிய காலை வணக்கம். தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு பிறந்த குழந்தைகள் முதல் அனைத்துத்தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அரசுத்துறைகளின் வாயிலாக பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றார். இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் ம. பிரபு, , சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியர் ஹபிபூர் ரஹ்மான், மாவட்ட வழங்கல் அலுவலர் உஷா, தூத்துக்குடி வட்டாட்சியர் முரளிதரன் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி