தூத்துக்குடியில் தொழிலாளர்கள் நலவாரியம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தொழிலாளர் துறை சார்பில் தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நலவாரியம் மற்றும் இதர 17 நலவாரியங்களின் நலத்திட்டங்கள் தொழிலாளர்களுக்கு விரைவாக சென்றடைவதை உறுதி செய்ய ஏதுவாக உருவாக்கப்பட்ட மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலாளர் பெருமாள் சாமி கதிர்வேல் கலந்து கொண்டு அனைத்து தொழிற்சங்கங்கள், தொழிலாளர்கள் நலன் தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு நன்றியை தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. இரவிச்சந்திரன் , தொழிலாளர் உதவி ஆணையர் கே. எஸ். ஆனந்த் பிரகாஷ் , அரசு அலுவலர்கள், நிர்வாகத் தரப்பு பிரதிநிதிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.