தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தைச் சேர்ந்த சங்கரன் (48), டாஸ்மாக் விற்பனையாளர், மது அருந்துவது தொடர்பாக மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து, முப்பிலிவெட்டி மயானத்தில் மதுவில் பூச்சிக்கொல்லி கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். உயிருக்கு போராடிய அவரை மருத்துவமனையில் சேர்த்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.