
விமான நிலையத்தில் ஆளுநரை மாவட்ட ஆட்சியர் வரவேற்றார்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்குச் செல்லும் வழியில், தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி இன்று (29.10.2025) தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அவரை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு. க. இளம்பகவத், இ. ஆ. ப. அன்புடன் வரவேற்று நினைவுப் பரிசாக ஒரு புத்தகத்தை வழங்கினார். இந்த நிகழ்வில் விமான நிலைய மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் உடனிருந்தனர்.







































