
தெப்பத் திருவிழா நடத்த பிஜேபி கோரிக்கை
தூத்துக்குடியில் தெப்ப திருவிழாவை இந்து சமய அறநிலையத்துறை முறையாக நடத்த வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி சார்பில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், சிவன் கோவில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். இந்த மனுவில், திருவிழாவை சிறப்பாக நடத்தவும், பக்தர்களின் நலனை உறுதி செய்யவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.







































