திருவைகுண்டம் - Srivaikuntam

காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம்: வேலை நிறுத்தம்!

காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம்: வேலை நிறுத்தம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் திட்டம் கடந்த இரண்டாம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், மது பாட்டில்களை வாங்கும் போது ஸ்டிக்கர் ஒட்டி கூடுதலாக பத்து ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்த திட்டம் அமுல்படுத்திய நாளிலிருந்து மதுவை பயன்படுத்துவோருக்கும், டாஸ்மாக் பார் நடத்துபவர்களுக்கும் இடையே வாக்குவாதம், சண்டை, மண்டை உடைப்பு போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதனால் பல இடங்களில் டாஸ்மாக் கடைகள் பூட்டப்பட்டு மது விற்பனை நிறுத்தப்பட்டது. பாட்டிலில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கரை மட்டும் கொடுத்துவிட்டு பத்து ரூபாய் கேட்பதாகவும், பாட்டிலுடன் ஸ்டிக்கரையும் சேர்த்து ஒப்படைத்தால் மட்டுமே பத்து ரூபாய் கொடுக்க முடியும் என்பதில் பார் ஊழியர்களுக்கும் மது பிரியர்களுக்கும் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டு வருவதால், இதற்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி இன்று தூத்துக்குடி நகர் பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் திறக்கப்படவில்லை. இது தொடர்பாக டாஸ்மாக் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


కరీంనగర్ జిల్లా