கோரம்பள்ளம் குளத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் உப்பாற்று ஓடை வழியாக வீரநாயக்கன்தட்டு, காலாங்கரை பகுதி விவசாய நிலங்களுக்குள் பாய்ந்துள்ளது. இதனால் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் கடந்த 4 நாட்களாக தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. நோய் பாதிப்பால் வாழை இலைகள் மஞ்சள் நிறமாக மாறத் தொடங்கியுள்ளன. வடிகால்கள் முறையாக தூர்வாரப்படாததே இதற்குக் காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். உப்பாற்று ஓடை நீர் விவசாய நிலங்களுக்குள் வராமல் தடுக்க கரைகளை உயர்த்தவும், வடிகால்களை சீரமைக்கவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.